தள்ளாடும் வயதிலும் பொல்லூன்றியபடி தோளில் துண்டோடு பல்லில்லாத வாய் திறந்து சிரித்து மறதி என்பது சற்றும் அற்ற என் அன்பு தாத்தா சென்றார் இளைஞர் சங்கத்துக்கு தலைவன் தானே என்ற பெருமிதத்தோடு.. பொறுப்போடு.. வியப்போடு நான்.!
என் காதலி அணிந்துவிட்ட தங்கச் சங்கிலி அடிக்கடி கழுத்தை உரசும் போதெல்லாம் அவள் நினைவு வந்தது! இப்போது புரிந்ததா அவள் தங்கச் சங்கிலி அணிந்துவிட்ட மர்மம்!
விண்ணகத்தில் இந்திர சபையில் நடந்த விழாவொன்றில் நிலவுக்கு உவமையாக உன் பெயரை சிபாரிசு செய்ததாக சொல்கிறாயே... சத்தியமாக அது நான் இல்லை! மேனகை, ஊர்வசி இன்னும் பலரைப் பழிவாங்க யாரோ ஒரு புலவன் செய்த சதி அது!
முண்டியடித்து அதிக பணம் கொடுத்து சினிமாப் படம் பார்க்கச் சென்றவன் பாதியில் கவலையோடு வீடு வந்தான் என்னப்பா என்றால் கவர்ச்சி நாயகி பட்டிக் காட்டு வேடத்தில் வந்து விட்டாள் என்றான்...
இப்படி அழகழகாய் உடுத்தி உடுத்தி என் காசையெல்லாம் தண்ணியாய் கரைக்கிறாள் இவள்... ஏனடி என்றால் அவள் அழகாயில்லை என்று தானே என்னிடம் வந்தீர்கள் சின்னவீட்டு தத்துவம் புரியாதா உங்களுக்கு என்கின்றாள்..