அது நான் இல்லை!
விண்ணகத்தில்
இந்திர சபையில்
நடந்த விழாவொன்றில்
நிலவுக்கு உவமையாக
உன் பெயரை
சிபாரிசு செய்ததாக
சொல்கிறாயே...
சத்தியமாக அது
நான் இல்லை!
மேனகை, ஊர்வசி
இன்னும் பலரைப் பழிவாங்க
யாரோ ஒரு புலவன்
செய்த சதி அது!
Comments