Posts

நம் கையில்!

இதுவும் இன்னொரு  ஆண்டு தான்! வரமோ சாபமோ காலமது  தருவதில்லை... யாவும் எம் எண்ணத்தின் எதிரொலியாம்! 

விடுதலை!

ஒற்றைக் கால் ஊன்றி வான் நோக்கி கைகள் கூப்பி முழு முதல் தனை முணு முணுத்து முற்றும் திறக்க முயன்று கொண்டிருந்தன மரங்கள்! விழுந்து கிடந்த  இலைகளில் விசும்பல் ஏதுமில்லை மண் மீது விழுந்து தொழுகின்றனவோ யாம் அறியோம்!

நிம்மதி!

நீயே நிம்மதி என்றிருந்தேன்.  இன்று நீ இல்லாததால் நிம்மதியாய் இருக்கிறேன்! 

மாயையே!மனசு!!!

 உடைத்தெறிந்ததாய் சொன்ன இதயத்தில் உடைத்திடா உருவம் உடைத்தே சொன்னது போத்தலை உருவம் தவறென்று உள்ளதை காணாதே!!!

போத்தல்களின் நடனம்!

Image
ஒரு திருமண வரவேற்ப்பு விழாவுக்கு போயிருந்தேன். மதுப் போத்தில்களை காலி செய்த சிலர் நிறை வெறியில் குத்தாட்டம் போட்டனர்! அப்போது தோன்றியது இப்படி…! திருமண வரவேற்ப்பு விழா மது அருந்திய சிலர் தமை மறந்து ஆடினர் அங்கு ஆடியவர்கள் மனிதர்களா? இல்லை அவர்கள் அருந்திய மதுப் போத்தில்கள்!

உடைந்த உள்ளம்!

வானில் வெடித்துச் சிதறும் மத்தாப்புக்களை நானும் மகளும் பார்த்துக் கொண்டிருந்தபோதும் அதில் பெரிய மகிழ்ச்சி ஏற்படவில்லை. மகளைத் திரும்பி பார்க்கிறேன். சிரிக்கிறாள்… அந்த நொடியில்… சுற்றிலும் பல வண்ண மத்தாப்புக்கள் வெடித்துச் சிதறிய போதும் மகிழாத உள்ளம் உன் ஒற்றைச் சிரிப்பில் உடைந்து சிதறியது!

மகள்

மடிக் கணனி இருந்த இடத்தில் மகள்… மடிக் கணனி தொல்லைகள் தருவதில்லை இவளோ அழுது பின் சிரித்து இன்பத் தொல்லைகள் தருகிறாள்!