ஆடை களையும் நேரம்!
காலை நேரம். யன்னலூடாக வெளியே பார்க்கிறேன். பனி பொழிந்து காணுமிடமெங்கும் வெள்ளையாக காட்சி அளித்தது... சூரியன் தன் கரங்களால் பூமிப் பெண்ணை உரசிப் பார்க்கிறான்... மெல்ல மெல்ல பனி கரைகிறது...
அப்போது தோன்றியது இப்படி...
விதவைக் கோலம்
பூண்டுவிட்டாள் பூமிப்பெண்
என்றெண்ணி
ஆதவனும் மேலிருந்து
பல்லிளித்தான்!
அதற்கிசைந்து அவள்
தன் வெள்ளை ஆடை
மெல்ல மெல்ல
களைகிறாள்!
Comments
வாழ்த்துக்கள்