Posts

உறங்கிய புற்கள்!

குளிர் காலம் ஏறத்தாழ தொடங்கி விட்டது. பனி பொழிவு தொடங்கி விட்டது. வெள்ளை நிறப் பூக்களை மேலே இருந்து யார் தான் சொரிகிறார்களோ என்று நினைக்கத் தோன்றும். அதனைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு வித ஆனந்தம்! பனி மூடிய புற்கள், வீதிகள் என்று எல்லாமே வெள்ளை நிறத்தில்… நமக்கு சும்மா இருக்குமா உள்ளம்…? எண்ணங்கள் எழுந்தாடும்… அப்போது கிறுக்கியது இது… (இவரும் இவற்ற கிறுக்கலும்…) குளிர் தாங்காது வெள்ளைக் கம்பளம் போர்த்தி உறங்கின புற்கள்!

கிடைத்த கடவுள்!

எங்கு தேடியும் அகப்படவில்லை கடவுள் கடைசியில் கூகிளில் தேடினேன்… குடும்பத்தோடு கிடைத்து விட்டார்!

வாழ்த்து!

இன்று தீபாவளி "Happy Deepawali" என அழகு தமிழில் தமிழர்கள் வாழ்த்தினார்கள்!

வழுக்கை…

Image
குளிர் காலம். காலையில் வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். சாலையின் இருமருங்கிலும் நின்ற மரங்கள் இலைகளை இழந்த சந்தோசத்தில் பரவசப்பட்டன (உண்மையாவா?). அந்தக் கணம் இப்படித் தோன்றியது எனக்கு… மரங்களுக்கு வழுக்கை விழுந்தால் மறுபடி முளைக்கும்! நமக்கு…? (விழுவதோடு சரி!)

இருகோடு.....

என்னில் இதயம் உன்னில் துடிப்பு என்னில் வேதனை உன்னில் கனவு என்னில் வறுமை உன்னில் கற்பனை நாமிருவர் ஒருவராவது எப்படியொன்றாள்!!! நன்றாய் கேளடிபெண்ணே!! உன்னில் நான் கண்டது அன்னையின் பாசம் என்னை மட்டுமே மகிழ்வித்து எனக்காய் வாழ்ந்தவள் தத்தெல்லாம் என் உணர்வின் மகிழ்ச்சி அவள் உணர்வோ என் உணர்வு ஆனதால் உனக்கும் வேண்டாம் தனியுணர்வு என்றேன்......... சிதறிய துளிகள் மௌனமாய் சொன்னது இன்னும் புரியவில்லை

துறவு!

Image
துறவு பூண்டு விட்டனவோ? காவி உடையில் மரங்கள்!

சுமை

உனக்கு நான் சுமையென்றாய் சரி என்றேன் என்னால் வாழ்வே சுமையென்றாய் பிரிந்து போனேன் - ஆனால் இப்போது தான் புரிந்தது இன்னெரு உறவைத் தேடியதால் நான் சுமையான கதை! சரி அவளையாவது சுமையென விரட்டாது காப்பாற்று!