Posts

முரண்

இரு வெண் புறாக்கள் சண்டை பிடித்தன நினைவுக்கு வந்தது அமைதிக்கு அடையாளமாய் புறாவைப் பறக்கவிடுவது!

புல்லாங்குழல் மொழி!

புல்லாங்குழல் பேசும் மொழி தமிழ் பூவை உந்தன் புன்னகையை மொழிபெயா்த்தால் தமிழ் நாவை நீ அசைத்தால் வருவதெல்லாம் தமிழ் நடந்துவரும் நீ நாட்டியத்தமிழ் இடை வளைத்து ஆடி வந்தால் நீயே இசைத் தமிழ்! உடை களைந்து காணாத இன்பத்தில் கரைந்து நின்றால் நீ இன்பத் தமிழ் மடை திறந்து உனை வா்ணிக்க துணை வருவதும் தமிழ்! அட அட அற்புதம் நீயே நான் படிக்கும் தமிழ்!

அறிவிப்பு

“இங்கே புகைக்காதீா்கள்” என்கிறது அறிவிப்புப் பலகை வாசித்தபடி சிகரெட் பற்ற வைத்தனா் இளைஞா்கள் சிலா்!

பறை

மரண வீட்டில் பறை அடிப்பது ஏனாம்? “அடே,நாளை உனக்கும் இதே கதி தான்” என்று உணா்த்தவே!

மரம் சொன்ன பதில்!

அகண்டு கிளை பரப்பி உயர்ந்து வானை முத்தமிடும் தோரணையில் நின்ற மரங்களை நெருங்கிக் கேட்டேன்… ”யார் வருகைக்காக இந்த நிழற் குடை?” குனிந்து கிளைக் கரம் தோழிற் போட்டு மரமொன்று பதில் சொன்னது! “நாங்கள் மனிதர்கள் அல்ல பயன் கருதிக் காத்திருக்க…”

வேண்டாத கொலுசு!

கைப் பையில் கிடந்த கொலுசுகளைப் பார்த்து விரக்தியாய்ச் சிரித்தாள் போரில் கால்களை இழந்த சகோதரி!

இரகசிய முத்தம்

நிலவு மேகப் போர்வைக்குள் மறைகின்ற போதெல்லாம் நான் உன்னை என் போர்வைக்குள் இழுத்து முத்தமிடுவது நினைவுக்கு வரும்!