Posts

மரம் சொன்ன பதில்!

அகண்டு கிளை பரப்பி உயர்ந்து வானை முத்தமிடும் தோரணையில் நின்ற மரங்களை நெருங்கிக் கேட்டேன்… ”யார் வருகைக்காக இந்த நிழற் குடை?” குனிந்து கிளைக் கரம் தோழிற் போட்டு மரமொன்று பதில் சொன்னது! “நாங்கள் மனிதர்கள் அல்ல பயன் கருதிக் காத்திருக்க…”

வேண்டாத கொலுசு!

கைப் பையில் கிடந்த கொலுசுகளைப் பார்த்து விரக்தியாய்ச் சிரித்தாள் போரில் கால்களை இழந்த சகோதரி!

இரகசிய முத்தம்

நிலவு மேகப் போர்வைக்குள் மறைகின்ற போதெல்லாம் நான் உன்னை என் போர்வைக்குள் இழுத்து முத்தமிடுவது நினைவுக்கு வரும்!

புரியவில்லை...

மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று யார் சொன்னது? இத்தனை நாளாய் என் காதலுக்கு மெளனத்தையே பதிலாய் தந்து கொண்டிருக்கிறாயே நீ!

மெளனமாய் ஒரு கேள்வி!

உன் மெளனங்களைப் பல மாதிரி மொழி பெயர்க்கத் தெரிந்த எனக்கு நீ பேசிய போது மட்டும் புரியவில்லை அர்த்தம்...!

ஒரு சொல்!

நிறையப் பஞ்சு ஒரு தீக்குச்சி போதும் எரித்துவிட... நெஞ்சு நிறையக் காதல் - ஒரு சுடு சொல் போதும் பேசாதிருக்க!

காகிதம்

அவன் நினைவுகளை கிறுக்கி கிறுக்கி! உன்னைக் குப்பைத் தொட்டியில் நான் போட..... அவனே! நான் கிறுக்கிய உன்னைச் சேகரித்து சேகரித்து என்னை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டான்....