Posts

பொருத்தம்

மனசும் மனசும் சேர்ந்து காதல் வர உறவும் உறவும் சேர்ந்து மகிழ்ச்சி வர சங்கடமானதையா வாழ்கை.... அவள் குறிப்பும் என் குறிப்பும் பெருந்தாது போனதால்....

சுமை

உனக்கு நான் சுமையென்றாய் சரியென்றேன் என்னால் வாழ்வே சுமையென்றாய் பிரிந்து போனேன்- ஆனால் இப்போது தான் புரிந்தது இன்னெரு உறவை தேடியதால் நான் சுமையான கதை சரி அவளையாவது சுமையென விரட்டாது காப்பாற்று.......

உரிமை

மூன்று முடிச்சு போட்டதும் இப்படியிரு அப்படியிரு அதைவிடு இதைவிடுயென உனக்காய் என்னை மாற்றிய உன்னால்....... முப்பது வருடமாகியும் எனக்காய் ஒரு கெட்ட பழக்கம் கூட விட முடியவில்லையே.... ஏன்?

முரண்பாடு

என்ன ஒரு முரண்பாடு அடக்கம் செய்யப்பட்ட பின்னும் தன்னைக் கொண்டவனுக்காக உயிர் கொடுக்கிறது தீக்குச்சி!

அம்மா...

அம்மா, உன்னையும் என்னையும் மண்ணில் படைத்ததால் அவளுமோர் பிரம்மா!

காயம்

பல பெண்களின் இதயத்தில் காதல் அம்பை விட்டு ரசித்தான் என் நண்பன்... அவன் எய்த அம்பு அவன் இதயத்தை தைத்த போது வலியால் மதுக் கடை தேடினான் காயத்தை ஆற்ற

உண்மை

சத்தியம் சத்தியமென பிள்ளைமேல் சத்தியம் செய்தார் என் கணவர் சாயங்கால மதுக்கடை திறக்கும் வரை.. சத்தியம் செய்தவருக்கு தெரியாது நான் நம்பாத மனிதரே அவர் தான் என்ற உண்மை.....