Posts

கலங்கிய கவர்ச்சிநடிகை

புடைவைக் கடை திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்த கவர்ச்சியுடை நடிகைக்கு எட்டுமுழப் புடைவை அன்பளிப்புச் செய்து அவள் முகத்தை வாட வைத்தார் உரிமையாளர்.

பாதணி தந்த பாடம்

கடை கடையாக ஏறி இறங்கிய போதும் மனதுக்கு பிடித்தமான பாதணி இல்லையே என கலங்கியபடி வந்த என்னிடம் பிச்சை கேட்டான் இரு கால்களையும் இழந்து கையூன்றி நடக்கும் ஒருவன்

அத்தான்...

அத்தான் இப்போதெல்லாம் நீங்கள் அடிக்கடி பொய் சொல்கிறீர்கள்... மனதுக்குள் நினைத்தேன் 'எப்போதேனும் உண்மை சொல்லியிருக்கிறேனா?'