மரம் சொன்ன பதில்!

அகண்டு கிளை பரப்பி
உயர்ந்து வானை
முத்தமிடும் தோரணையில்
நின்ற மரங்களை நெருங்கிக்
கேட்டேன்…

”யார் வருகைக்காக
இந்த நிழற் குடை?”

குனிந்து கிளைக் கரம்
தோழிற் போட்டு
மரமொன்று பதில்
சொன்னது!

“நாங்கள் மனிதர்கள் அல்ல
பயன் கருதிக் காத்திருக்க…”

Comments

வாவ்.... அருமை.... மரம் மீண்டும் செருப்பிலடித்திருக்கிறது...


என் வலையில் "ஒரு தென்னையின் தற்கொலை" படியுங்கள்
கதிர் நீங்கள் சொன்ன "ஒரு தென்னையின் தற்கொலை" படித்துக் கருத்திட்டேன். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.