Posts

Showing posts from December, 2012

உடைந்த உள்ளம்!

வானில் வெடித்துச் சிதறும் மத்தாப்புக்களை நானும் மகளும் பார்த்துக் கொண்டிருந்தபோதும் அதில் பெரிய மகிழ்ச்சி ஏற்படவில்லை. மகளைத் திரும்பி பார்க்கிறேன். சிரிக்கிறாள்… அந்த நொடியில்… சுற்றிலும் பல வண்ண மத்தாப்புக்கள் வெடித்துச் சிதறிய போதும் மகிழாத உள்ளம் உன் ஒற்றைச் சிரிப்பில் உடைந்து சிதறியது!

மகள்

மடிக் கணனி இருந்த இடத்தில் மகள்… மடிக் கணனி தொல்லைகள் தருவதில்லை இவளோ அழுது பின் சிரித்து இன்பத் தொல்லைகள் தருகிறாள்!

ஆடை களையும் நேரம்!

காலை நேரம். யன்னலூடாக வெளியே பார்க்கிறேன்.  பனி பொழிந்து காணுமிடமெங்கும் வெள்ளையாக காட்சி அளித்தது... சூரியன்  தன் கரங்களால் பூமிப் பெண்ணை உரசிப் பார்க்கிறான்... மெல்ல மெல்ல பனி கரைகிறது... அப்போது தோன்றியது இப்படி... விதவைக் கோலம் பூண்டுவிட்டாள் பூமிப்பெண் என்றெண்ணி ஆதவனும் மேலிருந்து பல்லிளித்தான்! அதற்கிசைந்து அவள் தன் வெள்ளை ஆடை மெல்ல மெல்ல களைகிறாள்!