Posts

Showing posts from 2011

இருகோடு.....

என்னில் இதயம் உன்னில் துடிப்பு என்னில் வேதனை உன்னில் கனவு என்னில் வறுமை உன்னில் கற்பனை நாமிருவர் ஒருவராவது எப்படியொன்றாள்!!! நன்றாய் கேளடிபெண்ணே!! உன்னில் நான் கண்டது அன்னையின் பாசம் என்னை மட்டுமே மகிழ்வித்து எனக்காய் வாழ்ந்தவள் தத்தெல்லாம் என் உணர்வின் மகிழ்ச்சி அவள் உணர்வோ என் உணர்வு ஆனதால் உனக்கும் வேண்டாம் தனியுணர்வு என்றேன்......... சிதறிய துளிகள் மௌனமாய் சொன்னது இன்னும் புரியவில்லை

துறவு!

Image
துறவு பூண்டு விட்டனவோ? காவி உடையில் மரங்கள்!

சுமை

உனக்கு நான் சுமையென்றாய் சரி என்றேன் என்னால் வாழ்வே சுமையென்றாய் பிரிந்து போனேன் - ஆனால் இப்போது தான் புரிந்தது இன்னெரு உறவைத் தேடியதால் நான் சுமையான கதை! சரி அவளையாவது சுமையென விரட்டாது காப்பாற்று!

பசி

வாழ்வோடு போராடி உலகை வெறுத்த மனசு வயிற்றுப் பசி போக்க கொஞ்சம் உழைத்துப் பணம்  கண்டதால் !! இறந்திடும் வாழ்வில் துணையென்ன இணையென்ன கொள்கையென்ன கேட்பாடென்ன இந்த நிமிடமே இன்பமென்றதால்!! துள்ளிய மனசு கொஞ்சம் உடல் பசி போக்க  தேடித் தேடி கொண்டியபணத்தில் பெற்றமரணம் கொடுத்த காலத்தி ல் துள்ளிய மனசு உறங்கி தப்பிற்கு சாட்சியாய் பேசியதால்!! உடல்வலியாற்றிட பணமின்றி தனியோ தவிக்கு தவிப்பே!!

சதி

அவளைக்கண்டதால் எனக்கு பிடித்ததால் மனசு தேவையென்றதால் அடுத்தடுத்து பொய் சொல்லி என் திருணத்தை ஆடம்பரமாய் செய்து முடித்தேன் அவளுக்காய்!! அந்த வெற்றிக்கொண்டாட்டதில் கொஞ்சம் அடித்தால் ஓர் உண்மைக்கு மட்டும் தலையசைத்ததால்!! இப்போ அந்திவாரமில்லா கட்டிடதில் கடன்காரனாய் அதனுடனோ குடும்பம் நடத்துகின்றேன் தனியே!!!!

மூன்றுமுடிச்சி.....

மணவறைசெல்ல காத்திருத்த மணமகன் காதுகளில் யாட மாட பேச்சு ஒலித்தது!! இவன்  இட்டிடும்     மூன்றுமுடிச்சால்            சட்டென நரகத்தை இங்கே பார்க போகின்றான் என்று !!தண்ணியடித்து தள்ளாடி அரைகுறைமயக்கதில் கேட்பதனை அறித்திருக்கவில்லை மணமகள்!!! இப்ப நரகம் யாருக்கு என்று எனக்குப்புரியவில்லை!!

முரண்

இரு வெண் புறாக்கள் சண்டை பிடித்தன நினைவுக்கு வந்தது அமைதிக்கு அடையாளமாய் புறாவைப் பறக்கவிடுவது!

புல்லாங்குழல் மொழி!

புல்லாங்குழல் பேசும் மொழி தமிழ் பூவை உந்தன் புன்னகையை மொழிபெயா்த்தால் தமிழ் நாவை நீ அசைத்தால் வருவதெல்லாம் தமிழ் நடந்துவரும் நீ நாட்டியத்தமிழ் இடை வளைத்து ஆடி வந்தால் நீயே இசைத் தமிழ்! உடை களைந்து காணாத இன்பத்தில் கரைந்து நின்றால் நீ இன்பத் தமிழ் மடை திறந்து உனை வா்ணிக்க துணை வருவதும் தமிழ்! அட அட அற்புதம் நீயே நான் படிக்கும் தமிழ்!

அறிவிப்பு

“இங்கே புகைக்காதீா்கள்” என்கிறது அறிவிப்புப் பலகை வாசித்தபடி சிகரெட் பற்ற வைத்தனா் இளைஞா்கள் சிலா்!

பறை

மரண வீட்டில் பறை அடிப்பது ஏனாம்? “அடே,நாளை உனக்கும் இதே கதி தான்” என்று உணா்த்தவே!