Posts

Showing posts from January, 2008

சந்தேகம்

என் மீது சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு இப்படி குடித்து குடித்து என்னை சந்தேகப்பட வைத்து விட்டாரே..

புரியவில்லை...

படிப்பது அக்காவா பிள்ளையா என்று யோசித்தேன்... குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அக்கா...

கணவன்

இப்படி அழகழகாய் உடுத்தி உடுத்தி என் காசையெல்லாம் தண்ணியாய் கரைக்கிறாள் இவள்... ஏனடி என்றால் அவள் அழகாயில்லை என்று தானே என்னிடம் வந்தீர்கள் சின்னவீட்டு தத்துவம் புரியாதா உங்களுக்கு என்கின்றாள்..

குறட்டை

அன்பான காதலனும் ஆசைக் காதலியும் ஈருடலும் ஓருயிருமாக ஒன்றி இருந்த போதிலும் இரவில் படுக்கையை இரு வேறாக பகிர்ந்தாள் காதலி காதலனின் குறட்டை அவளின் தூக்கத்தை கலைத்ததால்....

அப்பாவித்தனம்...

அம்மா உன்னைப் பற்றி அடிக்கடி 'அவன் அப்பாவி' எனச் சொல்லும் போதெல்லாம் பிடித்திருந்தது... ஆனாலும் அத்தான் கட்டிலறையிலுமா?

காதலன்

ஐயோ! பாவம் என் காதலன் அழகழகாய் உடுத்தி என்னோடு திரிந்தவன் பணத்திற்கு ஆசைப்பட்டு பக்கத்து வீட்டுப் பணக்காரப் பெண்ணைக் காதலித்து இப்படி வேலைக்காரன் ஆகி விட்டானே...

மனைவி

'எப்போது பார்த்தாலும் திட்டினால் ஏனடி சிரித்துக் கொண்டே போகின்றாய்' என்றால் 'எப்போதும் எனக்குள் நீ இருப்பதாக நீங்கள் தானே சொன்னீர்கள்' என்கின்றாள் எனைப் பார்த்து...

காதல்

உன்னைக் காகிதத்தில் எழுதி எழுதி தொலைத்து விட்டேன்

ஊதாரி..

பரீட்சை முடிந்தது அப்பா சொன்னார் உயர்தர படிப்புக்கு கணிதப்பிரிவை தேர்ந்தெடு என அம்மாவோ மருத்துவத்துறைக்குள் நுழையணும் என மனதார சொன்னாள் அவர்களுக்கு தெரியுமா பரீட்சை என சொல்லிவிட்டு சென்ற ஊதாரி நான் போக்கிரி படம் பார்த்துவிட்டு பரீட்சைக்கு செல்லவில்லை என்பது